Coutesy: Kalra family |
- பி. கிருஷ்ணமூர்த்தி
தாலாட்டு பாட்டிலே
தங்க தொட்டிலில் தூங்க வைத்து
தரணியை ஆள்வேன் என்று
தயங்காமல் பொய் சொன்னவள்
வானின் வெண்ணிலவை
வாங்கி தாரேன் என்று
வாயார பொய் சொல்லி
வயிற்றுக்கு உணவு அளித்தவள்
நடை பயிலும் நாட்களில்
நாலடியில் தடுமாறிய போது
தளராமல் நான் நடக்க
தாங்கி பிடித்தவள்
மழலையில் திக்கியபோது
மகிழ்ந்த ரசிகை நீ
மறைந்து விளையாடியதை
மறக்கவில்லை இன்னும் நான்
பள்ளி பருவத்தில்
பாடங்களை படிக்க வைத்தாய்
உன்னத வாழ்கைக்கு
உண்மையை உபதேசித்தாய்
எனக்காக பெண் பார்த்து
எனக்கு துணையும் கொடுத்தாய்
என் வாரிசை சுமந்தவளுக்கு
ஏனம்மா உன் மேல் வெறுப்பு
முடிவுரை நாட்களில்
முதியோர் இல்லத்தில் நீ இருக்க
குடும்ப கூட்டில் நான் இருந்து
குமறி அழுகின்றேன் உனக்காக
No comments:
Post a Comment