விலை மாது
விலை மாது என்ற பெயரில்
வாடகைக்கு எங்களை தருகிறோம்
வாழ்க்கையில் சிதறிய முத்துக்கள்
காமதேவன் ஆளும் வரை
கட்டாயம் தேவை எங்களது சேவை
பத்தினி பட்டத்தை இழந்திருந்தாலும்
பாசத்திற்கு ஏங்கும் பாவ ஜன்மங்கள்
உலகம் தூங்கும் நேரம்
உல்லாசத்திற்கு உதவிகின்றோம்
வாடிக்கையாளர்கள் பலவிதம்
வழக்கமான கதைகளும் பலவிதம்
கூண்டில் துவளும் குயில்கள் நாங்கள்
கூவமுடியா ஊமைகள் ஆனோம்
குத்து விளக்காய் இருந்த நாங்கள்
சிவப்பு விளக்கில் அடிமைகள் ஆனோம்
ஆண்டவனை
நாங்கள் வேண்டுவதெல்லாம்
அழியட்டும்
எங்களுடன் இந்த தொழில்
அணையட்டும் சிவப்பு விளக்கின் ஜோதி
எரியட்டும் குத்து விளக்கின் திரிகள்
- பி. கிருஷ்ணமூர்த்தி
- பி. கிருஷ்ணமூர்த்தி
No comments:
Post a Comment