Thursday, October 12, 2017

         ஒரு ஊமையின் ராகம்                                                                                                                                     

                                                                                         பி.  கிருஷ்ணமூர்த்தி

ஊர் எல்லாம் அவன் பெயர்                           
ஊமை தம்பி என்பது

அண்ணன் இல்லா தம்பி அவன்    
அண்ணனாக கைகொடுப்பான்                              
ஊர்கோடியில் அவன் குடிசை
ஊமைக்கோ இசையில் ஆசை

வாய் பேசா வரம் பெற்றும்
காது கேளா நிலையிருந்தும்

மானசீக மேடையில்
ராகங்களை ரசித்தவன்                                                              

சத்தங்கள் அவனுக்கு சங்கீதம்
 ராகங்கள் அவனுக்கு  சொந்தங்கள்

பொழுது விடியல் வேளைகளில்
பூபாளம் அவனுக்கு காத்திருக்கும்

காட்டுக் கருங்குயில் கூவுதலில்
காம்போதி அவனுக்கு எதிரொலிக்கும்

மேகம் சிந்தும் மழைச்சாரலில்
மோகனத்தை அவன் ரசித்தான்
ஓர் இரவு
  
காட்டுத் தீ குடிசையை எறிக்க
கருகி விழுந்தான் ஊமை தம்பி

முடிவுரை அவனுக்கு அறிமுகமானது
 முகாரி  ராகத்தில்









No comments:

Post a Comment