Courtesy: shutterstock
- பி. கிருஷ்ணமூர்த்தி
சென்ற வருட முடிவில் புதிதாக உருவான கொடிய ‘கரோனா’ என்ற தொற்று நோய் சீன நாட்டில் ஆரம்பித்து, உலக நாடுகளை உலக்கி வைத்து, மனித சமுதாயத்திற்கே ஓரு பெரும் சவாலாக இருந்து வருகிறது. அது வேகமாக பரவி உலக மக்களின் அன்றாட வாழ்க்கையையும் பொருளாதாரத்தையும் சீர்குலையை வைத்திருக்கிறது. இளம் வயதினரும், முதியவர்களும் ‘கரோனா’ தாக்கத்தால், அதை எதிர்த்து போராட முடியாமல் தங்கள் மரணத்தை எதிர் கொண்டு வருகின்றனர்.. ‘கரோனவை’ மனித உடலில் எதிர்க்கும் சரியான _ மருந்தும் இன்னும் கண்டுபிடிக்காத வரை அதன் ஆட்டம் எல்லா நாடுகளிலும் தொடர்ந்து வரும். ‘கரோனா’ மேலும் பரவாமல் இருக்க, அமெரிக்காவும, மற்ற நாட்டின் அரசாங்ககளும், தற்காப்பு விதிகளாக, மக்களை வெளியே செல்லாமல், அலுவக வேலைகளையும் வீட்டிலிருந்து பார்கவும், கல்வி நிறுவனங்களும் திரையருங்களையும் காலவரையின்று மூடியும், ஊரடங்கு சட்டத்தையும் உத்திரவுகளக பிறப்பித்திருக்கின்றன. மேலும் சமூக தொலைவு, தனிமை படுத்துதல், முகமூடி அணிதல் இவைகளை அரசாங்கம் கட்டாயப்படுத்தி மக்களை அதன் கொடூர பிடியிலிருந்து தப்பிக்க வைக்க முயற்ச்சி செய்து வருகிறது.
இந்திய தமிழ் நாட்டின் வல்லுனர்களும், மேடை பேச்சாளர்களும், ஊரடங்கு உத்திரவினால் உண்டாகும் நன்மைகளை பட்டியல் போட்டு மக்களின் மன பண்பாடுகள் சுயநல எண்ணங்களிலிருந்து திருந்தி வாழ வழி செய்யும் என கனவு காண்கிறார்கள். ஆனால் எதிர் காலத்தில் அதற்கு என்ன விலை பொருளாரத்தில் கொடுக்க போகிறோம் என்று சிந்திக்க வேண்டும். இதற்கு காலம் தான் முடிவு செய்யும்.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள எல்பாசோ நகரமும் இந்த கரோனா – கோவட்-19 – வேட்டையில் சிக்கிய ஒன்றாகும். ஆக்கிரமித்த ஒரு வாரத்திலேயே பல உயிர்களை பலி வாங்கிய ‘கோவட்-19’, ‘எல்பாஸோவை’ சுற்றி மற்ற பல ஊர்களுக்கும் பரவி உயிர் சேதங்களை நிகழ்த்தி மக்களின் பயத்திற்கு காரணமாயின.
இப்படி சோகமே உருவான நிலையில் கூட, பள்ளிகள் மூடப்பட்ட சூழ்நிலையை மிகவும் மகிழ்ச்சியாக தினமும் கொண்டாடிய மைக்கேல் என்ற ஒன்பது வயது சிறுவனுக்கு, எந்தவித உலக பாதிப்பையும் உணராமல், வீட்டில் வீடியோ விளைட்டுக்களை வைத்து பொழுதை போக்கிக் கொண்டிருந்தான். அவன் தந்தை அலெக்ஸ, ஒரு இரும்பு பட்டறையிலும், தாய் எமிலி அரசாங்க மருத்துவ மனையில் செவிலியராக வேலை பார்த்து வந்தனர். மைக்கேலுக்கு இந்த வாழ்க்கை மிகவும் பிடிந்திருந்தது. பள்ளி நாட்கள் போல் இல்லாமல், மிகவும் தாமதமாக காலையில் படுக்கையிலிருந்து எழுந்திருப்பான். அதற்குள் அலெக்ஸும். எமிலியும் வேலைக்கு சென்று விடுவார்கள். அவனுக்கு நாள் முழுவதும் தேவையானதை அவனே கவனித்து கொள்வான். எமிலி, அவனுக்கு சாப்பாடு செய்து வைத்த பிறகுதான் வேலைக்கு செல்வாள். ‘கோடிவிட்-19’ வந்த பிறகு, மருத்துவ மனையில் வேலை அதிகமாக இருப்பதால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான் அவளால் வீட்டிற்கு வர முடிந்தது. பெற்றோர்கள் எவ்வளவு கஷ்ட்டப் பட்டாலும், மைக்கேலின் பள்ளி தொந்தரவு இல்லாத வாழ்க்கையும் வீடியோ விளையாட்டும் அவனுக்கு பிடித்திருந்தது. பல விதமான விளைட்டுகளை வீடியோவில் விடாமல் ஆடி சலித்து விட்டால் தன் நண்பர்களுடன் தொலைபேசியில் மணிக் கணக்கில் பேசிக் கொண்டிருப்பான். எமிலியோ அவனை மருத்துவ மனையிருந்து தொலை பேசியில் அடிகடி கண்காணிப்பாள்.
இப்படிபட்ட கவலையில்லா மைக்கேலிடம், ஒரே ஒரு குறைதான் அவனை மிகவும் வாட்டியது. விதவிதமான வீடியோ விளைட்டுகள் அவனிடம் இருந்தும், மிகவும் சிறுவர்களுக்கு பிடித்த “கான்டிக்ஸோ ரோபோ” என்ற வீடியோ விளையாட்டு மாத்திரம் அவனிடம் இல்லாதது அவனுக்கு பெரும் அவமானமாக இருந்தது. அவன் நண்பர்களும் அவனிடம் அது மிகவும் சிறந்த பொழுதுபோக்கு விளையாட்டு என்றும், அது அவனிடம் இல்லாததை சொல்லி கேலி செய்தனர். அதன் முக்கிய அம்சங்களாக, மேம்பட்ட தொழில்நுட்பத்தில் உருவாக்கபட்ட சிறுவர்களுக்கான சிறந்த பொழுது போக்கு அனுபவம். இதை வாங்கி தரும்படி பல முறை மைக்கேல் அவன் பெற்றோரிடம் கேட்டும், அவர்கள் வேலையினால் நேரம் கிடைக்காமல் வாங்கி தராமல் இருந்தனர் இதனால் மைக்கேலின் மன நிலையில் பெரும் ஏமாற்றமே இருந்தது
ஜான்சன் வின்சென்ட் என்ற மைக்கேல் வயதுடைய சிறுவனை, ‘கோவிட்-19’ அறிகுறிகளின் வியாதியால், அவசர சிகிச்சைக்கு எமிலி வேலை பார்க்கும் மருத்துவ மனைக்கு கொண்டு வந்தனர். சிகிச்சை பிரிவில் எமிலிதான் அவனை கவனித்துக் கொண்டாள். மருத்துவர்கள் வின்சென்டின் பரிசோதனையில் மிகவும் காய்ச்சல், இடைவிடா இருமல், மூச்சு திணரல் இருப்பதால் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றினர். அங்கு பல மணி நேர சிகிச்சைக்கு பிறகும், மருத்துவர்களால் வின்சென்டை காப்பாற்ற முடியாமல் உயிரிழந்தான். அவனை பெற்ற தாய், மேரியை கூட அவன் ‘கோவிட்-19’ நோயினால் இறந்ததால், அவனை பார்க்க அனுமதிக்கவில்லை. அவன் மற்ற சிறுவர்களுடன் விளையாடியதால் ‘கோவிட்-19’ வியாதி பரவியிருக்கும் என்பது மேரியின் அனுமானம். மகனை பறி கொடுத்த மேரியின் சோக முகத்தை பார்த்து எமிலி கண் கலங்கினாள்.
சோகமான முகத்துடன் வீடு திரும்பிய எமலி, மைக்கேல் வாசலில் அவளுக்காக காத்திருப்பதை புரிந்து கொண்டாள். வழக்கம்போல் மைக்கேல் தனக்கு வேண்டியதை கேட்டான். இன்னும் இரண்டு நாட்களில் வாங்கி தருவதாக பதில் கிடைத்ததும், இருவரிடையே சமரச உடன்பாடு ஏற்பட்டு அன்றய இரவை கழித்தனர்.
மறுநாள் காலை மருத்துவ மனைக்கு .சீக்கிரமாக வந்துவிட்ட எமிலி, வழக்கம்போல், தீவிர சிகிச்சை அறையை சுற்றி பார்தபொழுது, அங்கு வின்சென்ட் விட்டு .சென்ற பொருட்களில், மைக்கேல் கேட்டிருந்தபடி ரோபட் வீடியோ விளையாட்டு குப்பையில் கிடப்பதை பார்த்து, அதை மைக்கேலுக்காக எடுத்து வைத்து கொண்டாள்.
வேலை முடிந்து ரோபட் வீடியோவுடன் வீடு திரும்பிய எமிலி, வாசலில் தனக்காக காத்திருந்த மைக்கேலிடம், தான் கொண்டு வந்த ரோபட்டை கொடுத்தாள். மைக்கேலின் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சியின் பிரதிபலிப்பு. பெற்றவளுக்கு ஒரு நன்றி சொல்லிவிட்டு ரோபட்டுடன் தன் அறைக்கு ஒடினான். அதனுடன் வெகு நேரம் விளையாடி விட்டு பிறகுதான் மைக்கேல் தூங்க சென்றான்.
மறுநாள் காலை வழக்கம்போல் எமிலி தன் வேலைக்கு செல்ல புறப்பட்டாள். மைக்கேலின் அறையிலிருந்து மிகவும் பலமாக இடைவிடாமல் இருமல் சத்தம் கேட்க, எமிலி அவன் அறையை எட்டிப் பார்த்தாள். மைக்கேல் ஜுரத்தினால் மூச்சு விட முடியாமல் திணறிக் கொண்டிருந்தான். அவனது . அறிகுறிகள் கோவிட்-19’யை ஒத்து இருப்பதால், எமிலி உடனே அவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றாள். அங்கு டாக்டர்கள் பல மணி நேரம் தீவிர சிகிச்சை செய்து மைக்கேலின் உயிரை காப்பாற்றினார்க்ள். மைக்கேலுக்கு இந்த கோவிட்-19 எப்படி வந்தது என்பதை தெரிந்து கொள்ள டாக்டர்கள் ஆவலுடன் இருக்க, எமிலி, வின்செட் விட்டு சென்ற ரோபட் வீடியோவை தான் எடுத்து மைக்கேலிடம் கொடுத்ததை கூறியபோது டாக்டர்கள் அதிலிருந்த ‘கோவட்-19’ கிருமிகள் மைக்கேலிடம் பரவியதால்,அவனிடம் வந்தது. இந்த கிருமிகள் மானிட உடல் மட்டு மல்லாமல், உயிர் இல்லா பொருட்களின் மூலமும் பரவும் என்பதற்கு இது ஒரு சான்று என்றனர். மேலும் மைக்கேலின் உடலில் நோய் எதிர்க்கும் சக்தி அதிகமாக இருந்ததால் அவனால் உயிர் பிழைக்க முடிந்தது. வின்சென்ட்டின் ரோபட்டை தான் எடுத்து வந்து, மைக்கேலிடம் கொடுத்த குற்ற உணர்ச்சியை நினைத்து எமிலி மிகவும் வருந்தினாள். அங்கு நிலவிய நிசப்தத்தில் துல்யமான ஒரு குரலில் “என் ரோபட்டுக்கு என்னஆயிற்று” என ,அதுவரை கண் திறவா மைக்கேல் கேட்டபோது, எமிலிக்கு உயிர் வந்தது. மைக்கேலை காப்பாற்றிய ஆண்டவனுக்கு நன்றி கூறும் வகையில் பிரார்தனை செய்தாள்.