தேவதை
|
(Courtesy: Essenceofarts.blogspot.com) |
மழலையில் தவழ்ந்து
மாணவியாய்
துள்ளி
மங்கையென
மலர்ந்து
மஞ்சளில்
நீராடி
மருதாணியில் சிவந்து
மல்லிகையில்
மணந்து
மணமகளான
தேவதையே!
தவணை
முறையில்
தவமிருந்தேன்
தாலி
கட்டும் நேரத்திற்கு
மங்கள
வாத்தியம்
மோகனத்தில்
சஞ்சரிக்க
கல்யாண
மேடையில்
காத்து
நின்றேன்
பட்டுபுடவை
சலசலக்க
தங்க கொலுசுகளுடன்
பரதமும்
ஆட
மணமேடை
வந்தவளே!
வலிப்பு
நோய் என்
வாழ்க்கை
பரிசு என்பதை
மறைத்த
என் ரகசியமும்
மறுத்த
உண்மையும்
மயக்கத்தில்
உன் மேல் சாய்ந்தபோது
மண
மேடையில் வெளிச்சமானது
நிராகரிப்பின்
நிழல்கள்
நிஜமாக
தாண்டவமாட
ஆண்டவனின்
தண்டனை இது
அணைந்த
விளக்கானேன்
- பி.கிருஷ்ணமூர்த்தி