திசை மாறிய பாவை
பி. கிருஷ்ணமூர்த்தி
மேற்கு வானம் இருண்டு மூட
மேலூர் ரோட்டில் வீடு திரும்பும்
மேம்பால கட்டிட வேலை கூட்டத்தில்
மாநிற மேனியாள் மஞ்சுவும் ஒருத்தி
நாவின் உணர்ச்சிகளை நனைப்பதற்கு
நாயர் கடை சோடாவை குடித்து விட்டு
நாலு ரோட்டை எட்டி பார்த்து
நடக்க ஆரம்பித்தாள் குடிசை நோக்கி
மேகங்கள் மோததில் இடி முழங்க
மின்னலின் கதிர்கள் கண்களை பறிக்க
கொட்டும் மழையில் சொட்ட நனைந்தவள்
வீட்டிற்கு செல்ல வேகமாக நடந்தாள்
சட்டென வந்து நின்ற சைக்கிளில் ஒருவன்
சாராய நெடியில் மிதந்திருந்தும்
உதவும் உத்தமனாக சைக்கிளை காட்டி
உட்காட்ர்ந்து வர ஏற்பாடும் செய்தான்
வந்தவன் வழி மாறி அவளை கூட்டி சென்று
வழியில் இருந்த குடிசைக்குள் இறக்கி விட
விதியின் விளையாட்டு ஆரம்பித்த நேரம்
விடுதலை போருக்கு அவளும் ஆயத்தமானாள்
தான் பரிசம் போட்டவள் என்று கெஞ்சியும்
தாபத்தில் வந்தவன் நிலை தடுமாற
பரணியில் இருந்த சம்மட்டியால் ஒரே அடியில்
பாவ மூச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தாள்
கறை படிந்த கைகள் அவளை கண்டு சிரிக்க
குடிசையின் அகல் விளக்கும் அணய ஆரம்பித்து
பரிசம் போட்டவனுக்கு பதில் சொல்லும் தேவையில்
பரிதவித்தாள் பாவை அவள்
அணைந்து கொண்டிருந்த விளக்கின் ஜோதி
அபலயை நிரபராதி ஆக்கவே
பாவ ஜென்மத்தை குடிசையுடன் எரித்து
படைத்தவனிடம் கணக்கை தீர்த்தது
வெளியில் தப்பி வந்த மஞ்சுவின் கண்களுக்கு
விளக்கின் வெளிச்சம் வெளிப்புறம் கண் சிமிட்ட
தள்ளாடி அவள் சாலையை கடந்த போது
தடுமாறி மயக்கத்தில் கீழே விழுந்தாள்
வேகமாக லாரியை ஒட்டி வந்த வேலுவிற்கு
ரோடில் கிடந்தவள் அவன் பரிசம் போட்டவள் என்றதும்
மயக்கம் தெளிந்த மஞ்சுவும் வேலுவை பார்க்க
மாத கோவில் மணி ஒசையும் அவர்களை ஆசீர்வதித்தது